December 8, 2021

விளவங்கோடு தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் சொல்வது பற்றி எனக்கு கவலையில்லை, விஜயதாரணி எம்.எல்.ஏ ஆவேசம் …

1 min read
Spread the love

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விளவங்கோடு தொகுதி தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கக்கூடிய ஒரு இயற்கை வளம் கொண்ட தொகுதியாகும். கடந்த மூன்று முறையாக தொடர்ந்து அந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று வரக்கூடியவர் விஜய்தாரணி அவர்கள். இவர் விளவங்கோடு தொகுதியில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் மிகவும் அறிமுகம் ஆனவுடன் மக்களோடு மக்களாக இருந்து அத்தொகுதி குறித்த வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறார் என்பது அந்த தொகுதி மக்கள் தொடர்ந்து அவரை வெற்றி பெற செய்வதில் இருந்து தெரிய வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் விளவங்கோடு தொகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், விஜயதாரணி எம்எல்ஏ தொகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் மெத்தனமாக இருக்கிறார் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில்,

விளங்கோடு தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த சாலைகள் மற்றும் கிராமங்களை நேரடியாக சென்று ஆய்வு செய்து நிவாரணப் பணிகளையும் செய்து கொண்டு இருந்த விஜயதாரணி
இதுகுறித்து கூறுகையில், ” நான் என்றும் தொகுதி மக்களுக்காக உழைத்து வருகிறேன். ஆகவே தான், தொகுதி மக்கள் என்னை தொடர்ந்து வெற்றி பெற வைத்து
எனக்கு சிறந்த சட்டமன்ற உறுப்பினர் என்று சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள் இந்த தொகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்களால் சில புரளிகள் பரப்பப்படுகிறது. அதில் உண்மை இல்லை என்னுடைய தொகுதி தான் என்னுடைய உயிர் மூச்சு என்று நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் ”
என்று கூறினார்.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed