December 8, 2021

கும்மிடிப்பூண்டி பகுதியில்,கழிவுநீர் ஊர்தி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம், கழிவுநீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் அவதி…

1 min read
Spread the love

சென்னையில் சமீபத்தில் லாரிகள் மூலம் குடியிருப்பு பகுதிகளில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கழிவுநீர்களை நீர்நிலைகளில் ஊற்றியதால், அந்த லாரிகளை பறிமுதல் செய்த பசுமை தீர்ப்பாயம் அதிகாரிகள் அந்த கழிவுநீர் வாகனங்களுடைய லைசென்ஸ் பறிக்கப்பட்டது. மேலும் இது போன்ற நடவடிக்கைகளுக்கு இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் கழிவுநீர் ஊர்திகள் மூலம் வெளியேற்றப்படும் கழிவுநீரை மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் நீர்நிலைகளிலும் விடுவதால் காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள், மற்றும் வட்டாட்சியர், பேரூராட்சி நிர்வாகத்திற்கு பல புகார்கள் வந்ததை தொடர்ந்து அதிகாரிகள் பொது இடங்களில் கழிவுநீரை விடக்கூடிய வாகனங்களையும் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

அதிகாரிகளுடைய இந்த திடீர் நடவடிக்கைகளை கண்டித்து மூன்று நாட்களாக கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்த 20க்கும் மேற்பட்ட கழிவுநீர் வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் கழிவுநீர் ஊர்திகளின் சங்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.


அப்போது கழிவுநீர் வாகன சங்க ஆலோசகர் வழக்கறிஞர் சம்பத் அவர்கள் அதிகாரிகளிடம் கூறுகையில், கும்முடிபூண்டி கடந்த 20 ஆண்டுகளாக பெரிய பெரிய கம்பெனிகள் உருவாக்கியதால் கும்மிடிப்பூண்டி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள ஊராட்சிகள் அனைத்திலும் அதிகளவிலான மக்கள் இப்பகுதிகளில் குடியேறியதால் இப்பகுதி பெரிய அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது. ஆனால் அதற்கேற்ற கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படாத காரணத்தால் கும்மிடிப்பூண்டி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக மக்களுடைய பெரிய பிரச்சினையாக இருக்கக்கூடியது கழிவுநீர் வெளியேற்றும் பிரச்சனைகள் ஆகும்.

மழைக் காலங்கள் தவிர மற்ற நேரங்களில் கழிவு நீர்களை வெளியேற்றும் வாகனங்கள் மாந்தோப்புகள் மற்றும் தைலமர தோப்புகள் போன்ற பகுதிகளில் கழிவு நீர்களை விவசாயிகளுடைய அனுமதியுடன் அங்கு விட்டுவிடுகின்றனர். மழைக்காலங்களில் மட்டும் கழிவுநீர்களை வெளியேற்ற முடியாமல் மிகவும் அல்லல்பட கூடிய சூழ்நிலை உருவாகிறது. இந்நிலையில் அதிகாரிகள் கழிவுநீர் வெளியேற்றுவதற்கும், கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்கும் கட்டமைப்புகளை உருவாக்காமல் திடீரென கழிவுநீர் ஊர்திகள் மீது வழக்கு தொடுப்பது பொதுமக்களை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கும் எனக் கூறினார்.

இதில் , கழிவுநீரை வெளியேற்றுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் அதற்கான அரசுத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்தும் இருதரப்பினர் விவாதங்களை கோட்டாட்சியர் கேட்டறிந்தார். பின்பு தற்காலிகமாக திருமழிசையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவு நீரை கொண்டு போய் சேர்ப்பதற்கும்,
வருகின்ற ஒரு வார காலத்திற்குள் இந்த பிரச்சினைக்கான தீர்வினை விரைவில் எடுக்க வேண்டும் எனவும் கூறி அதை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக
ஆலோசனையும் வழங்கினார்.

இன்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு வெளியில் வந்த கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில்; கும்மிடிப்பூண்டி பகுதியில் தற்போது நாங்கள் கழிவு நீரை கொண்டு செல்வதற்கு 800 ரூபாய் வாடகை கட்டணமாக பொதுமக்களிடம் பெற்று வருகிறோம். ஆனால் அதிகாரிகள் கூறுவதுபோல கும்மிடிப்பூண்டியில் இருந்து திருமழிசை பகுதிக்கு கழிவு நீரை கொண்டு செல்ல வேண்டுமென்றால் வாடகை கட்டணம் குறைந்தது 8000 வரை பொதுமக்களிடம் வசூலிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் இதை அதிகாரிகள் யோசிக்காமல் கழிவுநீரை திருமலைசை கொண்டு போக வேண்டும் என கூறுகிறார்கள். இந்த பிரச்சனை துர்நாற்றம் அடிக்கக்கூடிய ஒரு மோசமான பிரச்சனை என்று பார்க்காமல் பொது மக்களுடைய அடிப்படை பிரச்சினை என்ற கோணத்தில் அதிகாரிகள் அணுக வேண்டும். இதில் நல்ல முடிவு அதிகாரிகள் எடுக்கும் வரை நாங்கள் கழிவுநீர் வாகனங்களை இயக்குவதில்லை என முடிவு செய்து இருக்கிறோம் என கூறினர்.

இந்த கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ், கும்மிடிப்பூண்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரித்து, கும்மிடிபூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா, கும்மிடிப்பூண்டி கழிவுநீர் ஊர்திகளின் உரிமையாளர்கள் சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சம்பத் மற்றும் சங்கத் தலைவர் ராமலிங்கம்,செயலாளர் கோபி,பொருளாளர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed