December 8, 2021

பொன்னேரி அருகே ஆரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு, மீண்டும் உடைப்பு ஏற்படாதவாறு கண்காணிக்க நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு…

1 min read
Spread the love

ஆந்திராவின் பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணியாற்றில் கடந்த 11-ம் தேதி நள்ளிரவு 17 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் சோமஞ்சேரி, வஞ்சிவாக்கம், பெரும்பேடுகுப்பம் ஆகிய 3 இடங்களில் ஆற்றின் கரை உடைந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், ஆந்திராவின் பிச்சாட்டூர் அணையில் இருந்து இன்று காலை 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. பிச்சாட்டூர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீரவரத்து தற்போது 3,000 கனஅடி வந்து கொண்டிருகிறது. இதனால் அணையில் இருந்து ஆரணியாற்றில் விநாடிக்கு 3,200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் பொன்னேரி அருகே உள்ளன் ஆரணியாற்றின் கடைநிலை பகுதிகளில் உள்ள ஆற்றின் கரைகள் மீண்டும் உடைய வாய்ப்புள்ளாதா, என்பது குறித்து
ஆரணியாற்றில் ஏற்கனவே உடைப்பு ஏற்பட்ட சோமஞ்சேரி பகுதியில் திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு செய்தார். அப்போது ஆரணியாற்றின் கரைகளை தொடர்ந்து கண்காணிக்க நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் உடன் இருந்தார். ரெட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed