November 27, 2021

நாகப்பட்டினம் மாவட்டத்தில், கிராம அளவில் நடைபெறும் சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சிதலைவர் மருத்துவர், அ.அருண் தம்புராஜ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்…

1 min read
Spread the love


தமிழக அரசின் ஆணைப்படி கணினி ‘ அ பதிவேடு’ கணினி சிட்டாவில் பெயர் திருத்தம், உறவுமுறை திருத்தம்,நிலத்தின் உரிமையாளர் பெயர் திருத்தம் போன்றவைகளை திருத்தம் செய்வது குறித்து விவசாயிகளின் நிலப்பட்டா பிரச்சனை .தொடர்பான சிறப்பு முகாம் நேற்று கீழ்வேளூர் வட்டத்தில் வடகரை,கோகூர், ஆந்தக்குடி,ஆகிய கிராமங்களுக்கு கோகூர் இ-சேவை மையத்திலும், வேதாரண்யம் வட்டத்தில் ஆயக்காரன்புலம்-4, ஆயக்காரன்புலம்3, பன்னாள் ஆகிய கிராமங்களுக்கு ஆயக்காரன்புலம் நூலக கட்டிடத்திலும் , திருக்குவளை வட்டத்தில் வாழக்கரை, மீனம்பநல்லூர், கிராமங்களுக்கு வாழக்கரை இ-செவை மையத்திலும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து நாகப்பட்டினம் வட்டத்தில் சீயாத்தமங்கை,கட்டுமாவடி,எரவாஞ்சேரி,அருள்மொழித்தேவன்,துறையூர் ஆகிய கிராமங்களுக்கு திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்.அ.அருண் தம்புராஜ், அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிறப்பு முகாம்களில் இதுவரை நாகப்பட்டினம் வட்டத்தில் 15 மனுக்கள் வரப்பெற்று 8 மனுக்கள் தீர்வு செய்யப்பட்டு அவற்றில் 3 மனுக்களுக்கு நத்தம் பட்டாவினையும்,5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு , மீதமுள்ள 7 மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.கீழ்வேளூர் வட்டத்தில் 24 மனுக்கள் வரப்பெற்று அவற்றில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு , மீதமுள்ள 19 மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.தொடர்ந்து வேதாரண்யம் வட்டத்தில் 21 மனுக்கள் வரப்பெற்று அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.

திருக்குவளை வட்டத்தில் 8 மனுக்கள் வரப்பெற்று அவற்றில் 7 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 1 மனு மட்டும் நிலுவையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக நாகப்பட்டினம் ஊராட்சிஒன்றியம் பாப்பாகோவில் ஊராட்சி,சமத்துவபுரத்தில் உள்ள பழுதடைந்த வீடுகளை பார்வயிட்டு,சமத்துவபுரம் தெருவில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்காதவாறு உயர்த்தவும்,சாய்பாபா வாய்க்காலில் பாப்பாகோவில் பிரிவு மழைநீர் வடிகாலில் ஆக்கிரமிப்புகள் மற்றும் ஆகாயதாமரைகளை அகற்றவும்,நரியங்குடி ஓடம்போக்கி ஆற்றின் கரைகளை உயர்த்தவும்,கடுவையாற்றின் கரைகளை உயர்த்தி மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைப்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்.அ.அருண் தம்புராஜ், அவர்கள் ஆய்வு செய்தார்.


இவ்வாய்வின்போது நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் இரா.மணிவேலன், அவர்கள்,மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.தனபால், வட்டாட்சியர் ஜெயபால், கிராம நிர்வாக அலுவலர்கள், மண்டல துணை வட்டாட்சியர்கள் , சரக வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – நா. மணிவணன்
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed