December 8, 2021

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த, பஞ்செட்டி வேலம்மாள் பள்ளி மாணவி ஹோஷினி சக்கராசனத்தில் கின்னஸ் சாதனை புரிந்து அசத்தல்…

1 min read
Spread the love

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சதீஷ்குமார் கண்ணன் – கலாவதி தம்பதியர் மகள் ச.க. ஹோஷினி, (15) பஞ்செட்டி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பதினோறாம் வகுப்பு படித்து வருகிறார்.

ஹோஷினி, கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், எட்டு ஆண்டுகளாக, யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவர், நின்றபடி, உடலை பின் நோக்கி வளைத்து, கைகளை தரையில் வைக்கும் யோகாசனமான, சக்கராசனத்தில், தொடர்ந்து, 16 நிமிடம் 56 வினாடிகள் நின்று கின்னஸ் உலக சாதனை படைத்தார்.

யோகாவில் கின்னஸ் சாதனை படைத்த ஹோஷினி, யோகா பயிற்றுனர் சந்தியா ஆகியோரை, கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் மற்றும் வேலம்மாள் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர் – ஆசிரியைகள், மாணவ – மாணவிகள் அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed