December 8, 2021

மணலி புதுநகர் குடியிருப்பு பகுதிகளுக்குள் கொசஸ்தலை ஆற்றின் வெள்ளநீர் புகுந்ததால் நள்ளிரவில் பொன்னேரி எம் எல் ஏ துரை சந்திரசேகர் ஆய்வு செய்தார்…

1 min read
Spread the love

சென்னையின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய பூண்டி ஏரியில், திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 தினங்களாக பெய்த கனமழையால் அதிகளவில் நீர் வரத்து வந்து கொண்டிருந்தது. இதற்கிடையே ஆந்திராவிலும் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆந்திரா பகுதிகளுடைய உபரிநீர்களும் பூண்டி ஏரிக்கு தொடர்ந்து வந்துக்கொண்டு இருப்பதால், பூண்டி ஏரியில் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. ஆகையால், பூண்டி ஏரியில் இருந்து நேற்று காலை 6,000 கனஅடி உபரி நீர் திறந்துவிட துவங்கி இரவு 7.30 மணி அளவில் படிப்படியாக 36,700 கனஅடி நீர் வரை திறந்து விடப்பட்டது.

அதனால், கொசஸ்தலை ஆற்றில் மிக அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 200 மீட்டருக்கும் மேல் அகலம் கொண்ட தாமரைப்பாக்கம் தடுப்பணையும்,
காரனோடை பாலத்தையும் கடந்து செல்லும் கொசஸ்தலை ஆற்றுநீர் , நாப்பாளையம்
பாலத்தைக் கடந்து மணலி புதுநகர் பகுதியில் பின்புறம் செல்லுகையில் குறுகிய இடத்தில் ஒடுவதுடன், ஆற்றின் இரண்டு புறம் கரைகளின் உயரமும் குறைவாகவும் அமைக்கப்பட்டு இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் பூண்டி ஏரியில் நீர் திறக்கும் போதெல்லாம் கொசஸ்தலை ஆற்றில் ஒடி வரும் வெள்ள நீர் மணலி புது நகரில் குடியிருப்பு பகுதியின் உள் புகுந்து பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 36, 700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நேற்று நள்ளிரவு கொசஸ்தலை ஆற்றின் கடைநிலை பகுதிகளான மணலி புதுநகர் பகுதியில் மசூதி குடிசைப் பகுதிகள் மற்றும் மகாலட்சுமி நகர், வடிவுடை அம்மன் நகர் போன்ற பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றில் இருந்து வழிந்து வெளியேறிய வெள்ளை நீர் அந்த குடியிருப்பு பகுதிகளை முழுவதும் சூழ்ந்தது.

இந்த தகவலை அறிந்த உடன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் உடனடியாக குசஸ்தலை ஆற்றுநீர் உள் புகுந்த மணலி புது நகர் பகுதிக்கு நள்ளிரவு 2:00 மணி அளவில் நேரடியாக சென்று வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பார்வையிட்டார். உடனே நீர்வள துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பூண்டி ஏரி நீர் திறப்பு தகவல்களை தெரிந்து கொண்டதுடன் வெளியேற்றப்படும் நீரின் அளவை படிப்படியாக குறைக்கவும் கேட்டுக்கொண்டார். பின்னர், பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவை நீர்வளத்துறை அதிகாரிகள் படிப்படியாக குறைக்க தொடங்கி, இன்று காலை நிலவரப்படி 23 ஆயிரம் கன அடியாக குறைக்கபட்டது.

மணலி புதுநகர் மக்கள் துரை சந்திரசேகர் எம்எல்ஏ விடம் கூறுகையில், ” எங்கள் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் வெள்ளம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், நாப்பாளையம் பாலம் அருகே இருப்பது போல், ஆற்றின் இரண்டு புறமும் உள்ள கரைகளின் உயரத்தை உயர்த்தியும், அகலப்படுத்தியும் அமைக்க வேண்டும் ” என கேட்டு கொண்டனர்.

” தமிழக முதல்வர் அவர்களுடைய கவனத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு செல்கிறேன் என்றும், நீர்வள ஆதார துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து, உங்கள் சார்பாக இந்த பிரச்சினை குறித்து எடுத்துக்கூறி அவர்களிடம் கோரிக்கை வைத்து இந்த பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைப்பேன்.” என பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் உறுதியளித்தார்.

நள்ளிரவில் 2 மணி அளவில் வெள்ளை நீர் ஊரின் உள் புகுந்த சிறிது நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் தங்கள் பகுதிக்கு வந்து தங்களுக்கு ஆறுதல் கூறியதுடன், தங்களுக்கு தைரியம் கொடுக்கும் வகையில் துணையாகவும் நின்றதால், அப்பகுதி மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர் . இந்த ஆய்வின் போது, வருவாய்த்துறை அதிகாரிகள் பொன்னேரி ஆர்டிஓ செல்வம் மற்றும் பொன்னேரி தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed