December 8, 2021

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமங்களில் 3 இடத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டது…

1 min read
Spread the love

மதுரைமாவட்டம், சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமங்களில் 3 இடத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில், உசிலம்பட்டி டிஎஸ்பி ஆலோசனையின் பேரில், விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட எரவார்பட்டி ஊராட்சி மன்றம் அலுவலகத்திற்கு முன்பாக விக்கிரமங்கலம் காவல் நிலையத்திலிருந்து பொதுமக்களுக்கு புகார் பெட்டி வைக்கப்பட்டது.

இந்த புகார் பெட்டி வைக்கும் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களுடைய புகார்களை காவல் நிலையத்திற்கு நேரில் செல்ல முடியாவிட்டாலும் தங்களுடைய புகார்களை இந்த புகார் பெட்டியில் எழுதி போடுவதன் மூலமும் புகார் பெட்டியின் மீது வெளியிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு வாட்ஸ்அப் மற்றும் எஸ் எம் எஸ் மூலமும் தங்களுடைய புகார்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர் சிவசக்தி சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல் ராஜேந்திரன் ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டி துணைத் தலைவர் செந்தாமரை, ஊராட்சி செயலாளர் மலைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், நரியம்பட்டி பிரிவு, நடுமுதலைக்குளம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போலீசார் புகார் பெட்டி வைத்துள்ளனர்.

செய்தியாளர் – வி காளமேகம் / மதுரை நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed