December 8, 2021

பழவேற்காடு அருகே வெள்ளத்தால் பாதிக்கபட்ட, ஆண்டார் மடம் கிராம மக்களுக்கு படகுகள் மூலம் சென்று பொருட்கள் வழங்கபட்டது…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே ஆண்டார் மடம் கிராமம் வடகிழக்கு பருவமழை காரணமாக முற்றிலும் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டது. ஆரணி ஆற்றின் கரைகள் உடைப்பால் கிராமத்தை சுற்றிலும் வெள்ளநீர் பாய்ந்து கொண்டு இருப்பதால் பழவேற்காட்டிலிருந்து படகுகள் மூலம் இங்குள்ள கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியினை சமூக ஆர்வலர் பிரதாப் ஏற்பாட்டில் இசை பிரியா கல்வியியல் மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பாக வழங்கப் பட்டது. இந்த அறக்கட்டளையின் நிறுவனர்
நரேஷ் மற்றும் நிர்வாகிகள் வினோத், உமேஷ், பிரதாப், மோகன் பாபு ஆகியோர் படகு மூலம் அரிசியினை ஆண்டார்மடம் கிராமத்திற்கு நேரிடையாக கொண்டு சென்று வழங்கினர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed