December 8, 2021

சோழவரம் அடுத்த காரனோடையில் இரு சக்கர வாகனத்தை ஒருவர் திருடி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பண்டிகாவனூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை(53). இவர் காரனோடையில் உள்ள டிராக்டர் மெக்கானிக் செட்டில் வேலை செய்து வருகிறார்.

இந் நிலையில் நேற்று பணி நிமித்தமாக வெளியில் சென்று விட்டு வந்து பார்த்த போது, கடையின் வெளியில் நிறுத்தி வைத்திருந்த அவரது இரு சக்கர வாகனம் திருடு போனது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து டிராக்டர் செட்டில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது இரு சக்கர வாகனத்தை ஒருவர் திருடி செல்வது பதிவாகியுள்ளது.





இதனையடுத்து சோழவரம் காவல் நிலையத்தில் ஏழுமலை புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சோழவரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed