December 8, 2021

ஏர்வாடியில் பண்பகம் அறக்கட்டளை சார்பில், எஸ்.எம்.ஹிதாயத்துல்லா ஆம்புலன்சை அர்ப்பணித்து வாழ்த்தினார்…

1 min read
Spread the love

பண்பகம் அறக்கட்டளை சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சித்திக் ரஹ்மான் அம்பலம் தலைமை தாங்கினார். சுஜாத் அகமது வரவேற்றார்,
ஹேப்பி குழுமம் பி.எஸ்.ஐ. கனி, சமூக ஆர்வலர் தினைக்குளம் முஹம்மது ரபீக், வண்ணை அஸ்கர் அலி, தமுமுக நகர தலைவர் நஸ்ரத்துல்லா, தர்ஹா ஹக்தார் இளைஞர் பேரவை பொறுப்பாளர் அபுபக்கர் பாதுஷா, தாருஸ்ஸலாம் ஹஜ் உம்ரா சர்வீஸ் நிறுவனர் சாதிக்குல் அமீன், திருப்புல்லானி ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான், மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் அஜ்மல் சரிபு, எஸ்டிபிஐ ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் சோமு,

மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுல்தான் அலாவுதீன், ராஜாமுகமது, அல்மாலிக் உதவும் குழு தலைவர் ஜெய்னுல் அப்பாஸ், ஏர்வாடி கல்வி மற்றும் தர்ம அறக்கட்டளை தலைவர் மற்றும் நிர்வாகிகள், யாதவர் நலச்சங்க தலைவர் நாகராஜன், பீட்டர், மாலிக் புரோஸ் கான் , மஸ்ஜிதே இப்ராஹீம் ஷா பள்ளிவாசல் தலைவர் ருக்னுதீன், அல் மதரஸத்துல் முஹம்மதியா பெண்கள் அரபிக்கல்லூரி துணைச் செயலாளர் சுல்தான் அலாவுதீன், எலைட் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் முகம்மது அலி ஜின்னா, இஸ்லாமிய ஜனநாயக பேரவை அமீரக பொறுப்பாளர் நெய்னா அசாருதீன், ஆலோசகர் ஹபீப் மற்றும் நிர்வாகிகள், பண்பகம் ஆம்புலன்ஸ் கமிட்டி தலைவர் நல்ல இப்ராகிம் மற்றும் நிர்வாகிகள், பண்பகம் பணியாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பண்பகம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் எம். எஸ். முஹம்மது இஸ்ஹாக் அறக்கட்டளையின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் மதரஸா இமாம் எஸ் ஷேக் இப்ராஹிம் அல்தாபி, மண்டபம் ஒன்றியம் திமுக செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றிய இஸ்லாமிய பைத்துல்மால் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.எம். ஹிதாயத்துல்லா பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஆம்புலன்சை அர்ப்பணித்தார். இறுதியாக அறக்கட்டளை நிர்வாகி நூருதீன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மாமுஜெயக்குமார் / பரமக்குடி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed