December 8, 2021

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பயிர்கள் மூழ்கியுள்ள பகுதிகளை உள்துறை அமைச்சக இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா , அவர்கள் தலைமையில் 4 பேர் கொண்ட மத்திய குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

1 min read
Spread the love

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பயிர்கள் மூழ்கியுள்ள பகுதிகளை உள்துறை அமைச்சக இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா, அவர்கள் தலைமையில் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் துறை இயக்குநர் விஜய் ராஜ்மோகன் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக மண்டல அலுவலர் ரனன்ஜெய் சிங், மத்திய ஊரக வளர்ச்சி சார்பு செயலாளர் எம்.வி.என்.வரபிரசாத்,அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் /வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திரரெட்டி,
ஆகியோர் கொண்ட குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கெளதமன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி, ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வடகிழக்கு பருவழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த பயிர் மற்றும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மத்திய அரசிடம் அளித்த கோரிக்கையை ஏற்று வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணத்தினால் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்து மழை வெள்ளம் பாதித்த பயிர் சேத விவரங்களை பார்வையிட்டு ஆய்வு சேத விவரங்களை மத்திய அரசிற்கு அறிக்கை அளித்திட மத்திய குழு நாகப்பட்டினத்தில் பார்வையிட வந்தது.

அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர், திருக்குவளை, வேதாரண்யம், ஆகிய நான்கு வட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் 5917.28 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா தாளடி, குறுவப பயிர்கள மூழ்கியுள்ளன. வீடுகளை பொருத்தமட்டில் 18 வீடுகள் முழுவதும் சேதமும்,808 வீடுகள் பாதி சேதமும், கால்நடையை பொருத்தவரையில் 28 பசுக்கள்,157 ஆடுகள், ஓரு காளை மாடு என்று மொத்தமாக 211 கால்நடை இழப்புகள் ஏற்பட்டு உள்ளது.மேலும்,இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர், ஏழு பெண்கள் காயமடைந்துள்ளனர்.


அதனைத்தொடர்ந்து நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய பாப்பாகோவில் ஊராட்சி ஏறுஞ்சாலை கிராமத்தில் கனமழையால் நீரில் மூழ்கியுள்ள மத்திய &குழுவினர்கள் &பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு கூடியிருந்த விவசாயிகளிடம் சேதம் குறித்து கலந்துரையாடினார்கள். பாப்பாகோவில் ஊராட்சி ஏறுஞ்சாலையில் உள்ள பத்தினியம்மம்ன் கோவிலில் ,மாவட்ட முழுவதும் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் மற்றும் பயிர்களின் சேதம் குறித்த புகைப்படங்களை மத்திய குழு பார்வையிட்ட போது அதற்குரிய விளக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்தம்புராஜ் விளக்கினார்.


இந்த ஆய்வில் நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் சு.அன்பரசன்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி,மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, வேளாண்மை இணை இயக்குநர் பன்னீர்செல்வம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.தனபால் , நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் இரா.மணிவேலன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் –
நா.மணிவண்ணன் /
நாகை
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed