January 18, 2022

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் காற்றால் ஏற்ப்பட்ட சேதங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார்…

1 min read
Spread the love

தமிழகத்தில் குறிப்பாக குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட சேதங்களை எடுத்துரைத்து பேசிய உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் குமரி மாவட்டத்தில் இந்த தடவை 55 விழுக்காடு எனவும் தமிழகத்தில் 50 பேர் உயிர் இழந்ததுடன் 50 பேர் காயமடைந்தும் உள்ளனர் எனவும் கூறினார்.

மேலும்,9,600 குடிசைகள் 2,100 வீடுகள் சேதமடைந்து உள்ளது. மேலும் 50,000 ஹெக்டேர் பயிர் நீரில் மூழ்கி நாசம் அடைந்துள்ளது மற்றும் 5,27 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்தது. குமரி மாவட்டத்தில் குறிப்பாக 4,000 மக்கள் பத்திரமான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
75 ஹெக்டேர் நெல் வயல்களும் வாழை பயிர்கள் 45 ஹெக்டேரும் சேதமடைந்தது. மேலும் பயிர்கள் நாசம் கணக்கிடப்படுகிறது.

மேலும் சாலை மற்றும் கட்டுமான சேதங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய குழு குமரி மாவட்டத்திற்கு ஆய்வு செய்ய வந்த போது ரூபாய் 250 கோடி நிவாரண உதவி கேட்டு அவர்களுக்கு மனு அளித்ததாகவும் தெரிவித்தார். இந்தத் தொகை வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு தேவைகளுக்காக கோரப்பட்டிருந்தது கூடுதலாக மாநில அரசு 550 கோடி ரூபாய் உடனடி நிவாரணமாகவும் 2,079 கோடி ரூபாய் நிரந்தர நிவாரணமாகவும் கோரியுள்ளது.

ஆகையால் அரசு உடனடியாக தமிழகம் மற்றும் குமரி மாவட்டத்திற்கு தேவையான வெள்ள நிவாரண தொகையினை வழங்குமாறு திரு விஜய் வசந்த் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *