January 18, 2022

சென்னையில் இயங்கி வரும் தொன் பாஸ்கோ அன்பு இல்லம் சமூக சேவை நிறுவனத்தின் 36வது ஆண்டு விழாவை சென்னை சாந்தோமில் உள்ள புனித பீட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது….

1 min read
Spread the love

குழந்தைகள் சமூக வலைதளம் மற்றும் இணையதளங்கள் பாதுகாப்பாகவும் அறிவு சார்பாகவும் கையாள வேண்டும் என்பதை மையப்படுத்தும் விதமாக தொன் பாஸ்கோ அன்பு இல்லத்தின் ஆண்டு விழா நடைபெற்றது.

குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை கருப்பொருளாய் கொண்டு சென்னையில் இயங்கி வரும் தொன்
பாஸ்கோ அன்பு இல்லம் சமூக சேவை நிறுவனம் அதன் 36வது ஆண்டு விழாவை சென்னை சாந்தோமில் உள்ள புனித பீட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் முனைவர் சரண்யா டி.ஜெயக்குமார், காவல்துறை துணை ஆணையர் கௌதமன், மயிலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சூரியகலா, மற்றும் சென்னை சலேசிய மாநில தலைவர் கே.எம். ஜோஸ், ஆகியோர் கலந்து கொண்டனர் .

இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தைச் சேர்ந்த 500 குழந்தைகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் ஆடல் பாடல் என கலை நிகழ்ச்சிகள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைவரையும் நிறுவனத்தில் இயக்குனரும் அருட்பணி ஜோசப் லியோ வரவேற்றார்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *