January 18, 2022

திருவாரூர் மாவட்டத்தில் கொடிநாள் தினத்தை முன்னிட்டு நிதி செலுத்தி வசூல் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன் துவக்கி வைத்தார்….

1 min read
Spread the love

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் படைவீரர்கள் கொடிநாள் தினம் -2021 முன்னிட்டு கொடிநாள் நிதி செலுத்தி வசூல் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன், அவர்கள் துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்ததாவது;

1949 -ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7-ஆம் நாள் படைவீரர் கொடிநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் பாரத திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்திடும் முப்படைவீரர்களின் அரும்பணிகளையும்,
தியாகத்தையும் போற்றிடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் , டிசம்பர் திங்கள் 7 ஆம் நாள் படைவீரர் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் படைவீரர்களின் நலன்களை காப்பது நம் அனைவரின் சமுதாய கடமையாகும். இதனை நிறைவேற்றிடும் வகையில் கொடி விற்பனை மற்றும் நன்கொடை மூலம் திரட்டப்படும் நிதியினை ஆன்லைன் கொண்டு முன்னாள் படைவீரர்களின் நலனுக்காக நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றன.
திருவாரூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு கொடிநாள் , நிதி வசூலுக்கு அரசு இலக்காக ரூ.18,86,000-/- நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.38,63,000-/ கூடுதலாக வசூலிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

அதேபோல், படைவீரர் கொடிநாள் 2021-ஆம் ஆண்டிற்கு அரசு ரூ.22,63,000 -/-இலக்கு நிர்ணயம் செய்துள்ளதில் அதிக வசூல்புரிந்து இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில் கடந்த ஆண்டை போலவே இவ்வாண்டும் மாவட்ட அலுவலர்கள் கொடிநாள் நிதியினை வசூல் செய்து இலக்கினை எய்திட வேண்டும். இந்நிதியுதவி நாட்டுக்காக போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினரின் மறுவாழ்விற்கும், எதிரிகள் மற்றும் தீவிரவாதிகளோடு போரிடும்போது இறந்த மற்றும் உடல் ஊனமுற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நலனுக்காகவும் மற்றும் படையிலிருந்து ஓய்வுபெற்று வரும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களின் நலனுக்காகவும் செயல்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன், அவர்கள் தெரிவித்தார்

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் ராஜன், மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் –
நா.மணிவண்ணன்
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *