January 18, 2022

பொன்னேரி ஆர்டிஓ பணிகள் குறித்து உயர் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் ஆவேசம்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சிறுபுழல்பேடடை ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகரில் வசிக்கும் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த 15-குடும்பங்களுக்கும், கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட மேட்டுத்தெருவில் குடியிருக்கும் 23-நரிக்குறவர் குடும்பங்களுககு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் செப்டம்பர்-30 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக அடுத்த ஒரு மாதத்தில் பட்டா வழங்கப்படும் என பொன்னேரி கோட்டாட்சியர் எழுத்து பூர்வமாக உறுதியளித்தார். மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை அந்த பிரச்சினைகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ஆத்துப்பாக்கம் கிராமத்தில் மலைக்குறவர் இன மக்களுக்கு பழங்குடி இன சான்றிதழ் வழங்க வேண்டும், பிறப்பு, இறப்பு பதிவிற்காக கிராம நிர்வாக அலுவலர், ஆர்.ஐ, வட்டாட்சியர் ஆகியோரின் அறிக்கை அனுப்பியும் பொன்னேரி கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பிக்காமல் காலம் கடத்துகிறார்.

இதனால் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு சலுகைகள், வேலை வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் எந்த முன்னேற்றமும் இன்றி உள்ளனர். எனவே விசாரணை செய்து உடனடியாக குடிமனை பட்டா மற்றும் இனச் சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், சிஐடியு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பில் இன்று பொன்னேரி கோட்டாட்சியரை கண்டித்து அம்பேத்கர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், சிஐடியு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள் உடைய நிர்வாகிகள் உரையாற்றினர் அப்போது பொன்னேரி கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் அருந்ததி இன மக்கள் மற்றும் பழங்குடியின மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை செய்து கொடுக்காத பொன்னேரி ஆர்டிஓ செல்வம் அவர்களுடைய அலட்சியப்போக்கு நடவடிக்கைகள் குறித்து ஆவேசமாக பேசினர். குறிப்பாக பொன்னேரி ஆர்டிஓ செல்வம் அவர்கள் இங்கு பொறுப்பேற்ற பிறகு அவர் நிறைவேற்றி கொடுத்துள்ள மற்றும் கிடப்பில் வைத்துள்ள பணிகள் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என கோரினர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், சிஐடியு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அருந்ததி இன மக்கள் மற்றும் பழங்குடியினர் மலைவாழ் குறவர் இன மக்கள் என அனைவரும் தங்களுடை ய குழந்தைகளுடன் அம்பேத்கர் சிலை அருகில் இருந்து ஆர்டிஓ அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்களை அழைத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, பொன்னேரி ஆர்டிஓ செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனை தொடர்ந்து கோட்டாட்சியர் நடத்திய பேச்சு வார்த்தைன் போது, நான், குடிமனை பட்டா வழங்க உரிய விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளேன் எனவும் மலைக்குறவர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மானுடவியல் துறையினர் விசாரணை அடிப்படையில் பழங்குடி இன சான்றிதழ் வழங்கப்படும் என கோட்டாட்சியர் செல்வம் நிர்வாகளிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது அதற்கு பதிலளித்த நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் உள்ள மற்ற மாவட்டங்களில் இதே அருந்ததியினர், பழங்குடியினர், மலைவாழ் குறவர்கள் போன்ற அனைவருக்கும் பிறப்பு இறப்பு சான்றிதழ் மற்றும் அவர்களுடைய தேவைகள் அனைத்தும் குறைந்தது ஒரு மாதத்தில் நிறைவேற்றி கொடுக்கப்படுகிறது ஆனால் தாங்கள் தான் வருடக்கணக்கில் ஆகியும் அவர்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைக்காமல் உள்ளீர்கள் என தெரிவித்தனர்.

இந்த போராட்டத்திற்கு சாலை வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார் இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி டில்லிபாபு, மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம், மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, திருவள்ளூர் மாவட்ட கொண்டா ரெட்டிஸ் பழங்குடி மக்கள் நலச்சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், சிபிஎம் கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேநதிரன், பொன்னேரி பகுதி செயலாளர் சேகர் (சிபிஎம்), சிஐடியு மாவட்ட நிர்வாகி ஜி.சூரியபிரகாஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் த.கன்னியப்பன், மாவட்ட பொருளாளர் எம்.சிவக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *