January 18, 2022

மதுரையின் ரோட்டு ஓரத்தில் உள்ள வறியவர்கள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்வை மற்றும் வலி நிவாரணம் மருந்துகள் வழங்கும் நிகழ்ச்சி…

1 min read
Spread the love

மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பு தொடங்கி தொடர்ச்சியாக மதுரையில் ரோட்டோரத்தில் வசித்து வரும் வறியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 214 நாட்களாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக அவர்களுக்கு பயன்படும் விதத்தில் போர்வை மற்றும் வலி நிவாரணப் பொருட்கள் வழங்கும் இந்த நிகழ்வு மதுரை காந்தி மியூசியம் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாகனேரி .மு .கண்ணப்ப செட்டியார் தலைமை தாங்கினார்.
ஆடிட்டர் சேதுமாதவா மதுரை கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் பாலகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தல்லாகுளம் உதவி காவல்துறை ஆணையாளர் சுரேஷ்குமார் மற்றும் நடிகர் விஜய் விஷ்வா (எ) அபி சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்கள். மேலும் வட்டாச்சியர் சிவகுமார், கலந்துகொண்டார். இப்பகுதியில் உள்ள ஏழை ,எளிய மக்களுக்கு உணவு, குளிர்காலத்தில் மக்களுக்கு பயன்படும் போர்வை, வலி நிவாரணப் பொருட்கள் வழங்கினார். தல்லாகுளம் உதவி காவல்துறை ஆணையாளர் சுரேஷ்குமார் பேசும்போது மதுரையின் அட்சயபாத்திரம் தொடர்ந்து வறியவர்களுக்கும் மன நோயாளி களுக்கும் உணவினை வழங்கி வருகிறது. மதுரையில் யாருமே பசியோடு இருக்க கூடாது என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. எனவே,எனது சார்பில் அட்சயப் பாத்திரம் அமைப்பு நிறுவனர். நெல்லை பாலு அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நான் பாராட்ட விழா நடத்தப்பட வேண்டும் என்று பேசினார்.

மேலும் நடிகர் விஜய் விஷ்வா (எ) அபி சரவணன் பேசுகையில், இந்த அமைப்பின் மூலம் மதுரையில் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். இந்த அமைப்பின் பணிகள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரையின் அட்சய பாத்திரம் மற்றும் பழுது சமையலறை. பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

செய்தியாளர் – கார்மேகம்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *