January 18, 2022

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி செய்து தரப்படததால் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி செய்து தரப்படததால் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டை சாலையில் காமராஜர் சிலை அருகே இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக்கு போதிய பேருந்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

அதே போல், திருவண்ணாமலை நகரத்தில் இன்று பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் பத்துநிமிடம் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. ஆட்டோ (சிஐடியு) ஓட்டுநர்கள் தானாக வாகனங்களை
நிறுத்தி போராட்டதிற்க்கு ஆதரவு அழித்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *