January 18, 2022

திருவொற்றியூர் பகுதியில் இரவு வீட்டிற்குள் புகுந்த பெரிய விஷபாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்…

1 min read
Spread the love

திருவொற்றியூர் ராமநாதபுரம் 10வது தெருவில் குடியிருந்து வருபவர் ராஜேஷ் , இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இன்று 7 மணி அளவில் இவருடைய வீட்டுக்குள் 5 அடிக்கும் மேல் நீளம் உள்ள ஒரு பெரிய பாம்பு நுழைந்து விட்டது. அதைப் பார்த்து அதிர்ந்து போன ராஜேஷ் குடும்பத்தினர் அலறி அடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடினர். பின்னர், எண்ணூர் தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொண்டு பாம்பு வீட்டினுள் புகுந்தது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.

உடனடியாக, ராமநாதபுரம் பகுதியில் உள்ள ராஜேஷ் அவர்களுடைய வீட்டிற்கு, எண்ணூர் தீயணைப்பு துறையினர் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் வந்து, ராஜேஷ் அவர்களுடைய வீட்டிற்குள் புகுந்து மறைந்து கொண்டிருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். 5 அடிக்கும் மேல் நீளமுடைய அந்தப் பாம்பு சாரைப்பாம்பு என தீயணைப்பு துறை வீரர்கள் தெரிவித்தனர். அவர்கள் பிடித்த அந்த பாம்பை வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என கூறி எடுத்துச் சென்றனர் இதனால் ராமநாதபுரம் 10வது தெரு பகுதியில் சிறிது நேரம் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *