January 18, 2022

மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் பாசன கால்வாயில் கழிவுநீர் கலந்து பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை நுரையாக வருவதால் விவசாயிகள் அச்சம்…

1 min read
Spread the love

மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் பாசன கால்வாயில் கழிவுநீர் கலந்து பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை பொங்கி ரோட்டை மறைக்கும் அளவுக்கு உள்ளது. அயன் பாப்பாகுடி கண்மாய் நிரம்பியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவனியாபுரம் அருகே உள்ள ஜே.பி – நகரில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிபட்டனர். அதனால், 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருந்தது.

இந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழை நீரோடு கலந்து பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை நுரையாக பாசன கண்மாயில் கலப்பதால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். மேலும் நுரை பொங்கி ரோட்டை மறைக்கும் அளவுக்கு உள்ளது. காற்று அடித்தால் நுரை காற்றில பறந்து ரோட்டில் செல்லும பாதசாரிகள், வாகன ஒட்டிகள் மீது படுவதால் விபத்து ஏற்படும் சூழ் நிலை உள்ளது.

செய்தியாளர் –
வி காளமேகம்
/மதுரை மாவட்டம்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *