January 18, 2022

ஒன்றிய அரசின் நீர் ஆதார திட்டங்கள் எல்லாம் மக்கள் பயன்பாட்டிற்கா? மந்திரிகளின் பயன்பாட்டிற்கா?

1 min read
Spread the love

பரந்து விரிந்த 500 சிறு குறு மன்னர்களையும் சமஸ்தானங்களையும் ஒன்றிணைந்த இந்த இந்திய ஒன்றியத்தின் மக்களுடைய மிக முக்கிய பிரச்சினையாகவும், பல மாநிலங்கள் உடைய தலையாய பிரச்சினைகளாகவும் இருக்க கூடியது தண்ணீர் பிரச்சினை. இந்த தண்ணீர் பிரச்சினைகளை தீர்க்க வேண்டி மறைந்த முன்னாள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம் அவர்களும், முன்னாள பிரதமர் வாஜ்பாய் அவர்களும் இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்று முயன்று அதற்கான முயற்சியில் அவர்கள் கண்டெடுத்த ஐயா ஏசி காமராஜ் அவர்கள் அந்த திட்டத்திற்கான வழிமுறைகளை வகுத்து கொடுத்தார். அதை அவர்கள் நடைமுறைபடுத்த முயன்றனர்.

பின்னர் அதில் பல சிக்கல்கள் எழவே, தேசிய நீர்வழிச்சாலை என்ற ஒரு புதிய திட்டத்தை வடிவமைத்து அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டி பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு மந்திரிகளிடமும் அதிகாரிகளிடமும் ஐயா ஏசி காமராஜ் அவர்கள் நடையாய் நடந்து திரிந்து கொண்டிருப்பது, தனது வீட்டு மக்களுடைய பிரச்சினையை தீர்க்க அல்ல, இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மக்களுடைய முக்கிய பிரச்சினையான தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டி. ஆனால், ஒன்றிய அரசு மந்திரிகளும், அதிகாரிகளும் இந்த தேசிய நீர்வழிச்சாலை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்காமல், ஜே ஜே எம் போன்ற பல ஆயிரம் கோடியை விழுங்கும் தோல்வி அடையப் போகும் திட்டத்திற்கு பாடுபட்டு வருகிறார்கள்.

மேலும், ஒன்றிய அரசு தற்போது அறிவித்துள்ள கென் – பெட்வா நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து அய்யா ஏ.சி.காமராஜ் அவர்கள் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் அதில், ” மத்திய அரசு கென் – பெட்வா நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு ரூ.44,605 கோடி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தால் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசம் இரு மாநிலங்களுக்கு இடையே தண்ணீரை பகிர்வதில் பிரச்சனைகள் தான் உருவாகும். ஏனெனில், பெரும்பாலும் கென் ஆற்றில் தண்ணீர் இருப்பதில்லை. அதே சமயம் நமது நவீன நீர்வழிச்சாலை திட்டம் மூலம் கென் – பெட்வா நதிகளை இணைத்தால் கென் மட்டுமின்றி பெட்வா போன்ற பிற நதிகளில் இருந்தும் வெள்ள நீரை எடுத்து கென் உட்பட நீர்வழிச்சாலை நெடுக உள்ள அனைத்து நதிகளுக்கும் தண்ணீர் வழங்க முடியும். தண்ணீருக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது.

உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசம் இடையே கென் மற்றும் பெட்வா நதிகளை இணைக்கும் நமது நவீன நீர்வழிச்சாலை திட்டம் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கது. தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதில் எந்த பிரச்சனையும் எழாது. நவீன நீர்வழிச்சாலையே நீர்த்தேக்கமாக செயல்படுவதால், இது அதிக தண்ணீரை சேமித்து, குறைந்த செலவில் குடிநீர், பாசனம் மின்சாரம் வழங்கும். எனவே மத்திய அரசு நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை செயல்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.” என ஒன்றிய அரசிடம் மீண்டும் குரல் கொடுத்துள்ளார்.

ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த கூடிய பெரும்பாலான திட்டங்கள் மக்களுக்கான வாழ்வாதார திட்டங்களா ? அல்லது அவர்களுடைய மந்திரிகளின் வாழ்வாதார திட்டங்களா ? என்பது தான் தெரியவில்லை. உறங்குபவர்களை எழுப்பலாம் உறங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியுமா…

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8949476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *