January 18, 2022

மாதவரம் வடக்கு பகுதி திமுக இளைஞரணி சார்பில் மணலியில், உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி…

1 min read
Spread the love

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ-வின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் வடக்கு பகுதி திமுக இளைஞரணி சார்பில் மணலி மண்டலம் 17 வது வார்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வட பெரும்பாக்கத்தில் நடைபெற்றது.

முன்னாள் கவுன்சிலர் கவிதாநாராயணன் தலைமை வகித்தார். இளைஞரணி துணை அமைப்பாளர் அஜய் முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் புழல்நாராயணன் 500 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், பெட்ஷீட்,பாய் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *