January 18, 2022

சோழவரத்தில் அமைச்சர் பங்கேற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் விதிகளை மீறி பம்பர் பொருத்தப்பட்டு உள்ள வாகனத்தில் வந்த அதிகாரி…

1 min read
Spread the love

உயிர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டாமல், கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பொருத்திய பம்பர்களை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புக்கு 4 சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் பம்பர்களும் முக்கிய காரணமாக உள்ளது. எனவே, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர்களை பொருத்தக் கூடாது என மத்திய அரசின் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2017-ல் உத்தரவிட்டது.

விதிகளை மீறி பம்பர் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வரு கின்றனர். மேலும் பம்பர் உள்ள வாகன உரிமையாளருக்கு போக்குவரத்து சட்டத்தின்படி 6 மாதம் சிறை தண்டணை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்,மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்ட சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ அவர்கள் வந்த வாகனம் பம்பர் கழட்டப்படாமல் அரசு உத்தரவை மீறும் வகையில் இருந்தது.

மேலும் சோழவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அரசு அலுவலர்கள் ஒருவர்கூட முககவசம் அணியாமல் இருந்தனர். இப்படி அரசுத் துறை அதிகாரிகளே அரசு இடும் உத்தரவினை கடைப்பிடிக்காமல் இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *