January 18, 2022

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சுற்றுலா பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம், வாகன சோதனையில் போலீசார்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு சுற்றுலா பகுதியில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று முழு ஊரடங்கு முன்னிட்டு பழவேற்காடு பகுதியில் வாகனத்தில் வருவோரை சரியான காரணங்கள் கேட்டு அனுப்பியும் முக கவசம் இல்லாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கியும் தேவையின்றி நடமாடியவர்களை எச்சரித்தும் அனுப்பி வைத்தனர்.

முழு ஊரடங்கை முன்னிட்டு பழவேற்காடு பகுதியில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. மேலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. பழவேற்காடு ஒட்டியுள்ள காமராஜர் துறைமுகம், அதானி மற்றும் எல்&என் டி துறைமுகங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு பழவேற்காடு வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் குறித்தும் வாகன சோதனை செய்யப்பட்டது.

திருப்பாலைவனம் காவல்துறை ஆய்வாளர் சின்னதுரை தலைமையில் திருப்பாலைவனம் உதவி காவல் ஆய்வாளர் சபாபதி, மண்டல துணை வட்டாட்சியர் காயத்ரி உள்ளிட்டோர் இந்த ஊரடங்கு கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்களுடன் கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு, பழவேற்காடு ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், கோட்டைக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், பழவேற்காடு மீன்விற்பனை கூட்டுறவு ஒன்றியம சங்கத் துணை தலைவர் சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *