January 18, 2022

மதுரையில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற மதுரை வாலிபர் கைது
ரூ 2 கோடி சர்வதேச மதிப்பில் போதை பொருள் மதுரை விமான நிலையத்தில் முதன்முறையாக கைப்பற்றப்பட்டது….

1 min read
Spread the love

மதுரையில் இருந்து இலங்கைக்கு செல்ல இருந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மூலம் விலை உயர்ந்த போதைப் பொருட்கள் கடத்த உள்ளதாக போதை தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுரை விமான நிலையத்திற்கு தகவல் அளித்த தன் பேரில் இலங்கை செல்லும் பயணிகளை தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த ஷகில் அஹமது (28) என்பவரின் உடமைகளை சோதனை செய்த போது பையில் வைத்திருந்த பழைய மண்ணெண்ணை அடுப்பில் மண்ணெண்ணை இருக்கும் பகுதியில் விலை உயர்ந்த போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.

எனவே அவரை கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது அந்த நபர் பொருள் தன்னுடையது இல்லை என்றும், விமான நிலையம் வந்தபோது அறிமுகம் இல்லாத நபர் இலங்கையில் சேர்த்து விடும்படி கேட்டதன் பேரில் எடுத்து வந்ததாக கூறினார். தொடர்ந்து பொருளை மதுரை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரி திருமால் ராஜ் கைப்பற்றி ஷகில் அகமது வை தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர்
வி காளமேகம்
மதுரை மாவட்டம்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *