January 18, 2022

திருப்பரங்குன்றம் அருகே, கொரோனா விழிப்புனர்வில் தனி ஒருவராக செயல்படும் “சோளங்குருணி ரவிச்சந்திரன் “…

1 min read
Spread the love

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோழங்குருணி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 58) இவர் சோளங்குருணி பகுதியில் டீக்கடை நடத்திவருகிறார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட கொரானா பாதிப்பு சமயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்து .
முகக்கவசம் , கபசுரக் குடிநீர் ஆகியவை வழங்கியும், கிராமம் தோறும் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வும் செய்து வந்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள கொரானா – 3வது அலை காரணமாக அவனியாபுரம் பெரியார் சிலை அருகே, போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கபாண்டியன் மற்றும் காவலர்களுடன் இணைந்து, கபசுரக் குடிநீர் , முககவசம் வழங்கி ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்து வருகிறார். மேலும் “தனித்திரு , விழித்திரு” “விலகி இரு” என்ற கொள்கையை வலியுறுத்தி காவல் துறை , சுகாதாரத் துறை மற்றும் தமிழக அரசு வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும் . முககவசம், சானிடைசர் உபயோகிக்கவும் அறிவுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருகிறார்.

கொரோனா காலத்தில் ஏற்கனவே செயல்பட்டது போல், தற்போதும்
கொரானா – 3வது அலை காலத்திலும் தனி ஒருவனாக விழிப்புணர்வு செய்து பொதுமக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். டீக்கடை தொழில் செய்து வரும் சோளங்குருணி ரவிச்சந்திரன்
தன்னார்வலராக இலட்சகணக்கில் செலவு செய்து மூன்றாவது அலைக்கும் தன்னால் இயன்ற சேவையை செய்து வரும் ரவிச்சந்திரனை தமிழக அரசோ, மத்திய அரசோ பாராட்டாமல் பாராமுகமாய் இருப்பது வேதனைக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.
ரவிச்சந்திரன் போன்ற தன்னார்வலர்களை பாராட்டி ஊக்குவித்தால் மென்மேலும் சேவைகள் தொடரும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

மதுரை கோரிப்பாளையம் அருகில், செஞ்சிலுவை சங்கத்தினர், முழு ஊரடங் நேரத்தில் குடு குடுப்பை அடித்து, கொரோனா தொற்று குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு…

கொரோனா மற்றும் ஓமிக்ரோன்
தொற்றை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கும் நிலையில், மதுரையில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடி அமைத்து காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை கோரிப்பாளையம் அருகில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் மற்றும் காவல்துறை இணைந்து சாலையில் வரும் வாகன ஓட்டிகளிடம் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குடு குடுப்பு அடித்தும், உடல் பரிசோதனை செய்தும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொடுத்தும் , விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

செய்தியாளர் – காளமேகம் மதுரை மாவட்டம் நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *