January 18, 2022

பொங்கலுக்கு தயாராகும் பொங்கல் பானைகள், நாகரிக வளர்ச்சியால் மண் பாண்டம் தயாரிக்கும் தொழில் முடங்கி வரும் அவலநிலை…

1 min read
Spread the love

பொங்கலுக்கு தயாராகும் பொங்கல் பானைகள், நாகரிக வளர்ச்சியால் மண் பாண்டம் தயாரிக்கும் தொழில், முடங்கி வரும் அவலநிலை உருவாகி வருகிறது. மனிதன் நாகரீகம் அடைந்தவுடன் செய்த முதல் தொழில், மண்பாண்டம் தயாரிக்கும் தொழில். காலமாற்றம், மக்களின் வாழ்க்கை முறை மாறி வருவதன் காரணமாக, அந்த தொழில் அழிந்து வரும் நிலையில் உள்ளது. காலப்போக்கில், உலோகப் பயன்பாடு அதிகரிப்பால் மண்பாண்டம் தயாரிக்கும் தொழில் காணாமல் போய் வருகிறது. பானை கொள்கலனாக மட்டும் இன்றி ஒரு அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இத்தகைய பானைகள் பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் தயாரிக்கப்படுகின்றன.

அடுப்பு, மண் சட்டி, பானை, குளுமை (தானியங்களைப் பாதுகாக்கும் மட்கலம்) போன்ற பொருட்களை அன்றாடம் செய்து விற்றுத் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தனர். மேலும், குடம், கலையம், விளக்கு, முகூர்த்தப் பானை, தாளப்பானை, கடம், பூத்தொட்டி, அகல் என்று பலவகையான பொருட்களையும், கலைத் தன்மையோடு உருவாக்கி வருகின்றனர். கிராமங்களில் மண் பாண்டத்தில் சமைப்பதும், மண் பானைச் சோறும் நாளடைவில் மறைந்து போனது. ஆனால் தற்போது, பெரிய பெரிய நகரங்களில் உள்ள, உணவகங்களில் மண்பாணை சமையல், பானை சோறு என விற்க்கப்பட்டு வருகின்றன. நாகரிக வளர்ச்சியின் காரணத்தாலும், மேலும் வேலை பழு குறைவதாலும், மக்கள் பழமையான மண் பாத்திரத்தில் சமைத்தால், விறகு வைத்து சமைக்க வேண்டும், நேரம் அதிகமாகும் ஆனால் தற்போது, அலுமினிய பாத்திரத்தில் சமைத்தால், உடணடியாக சமைத்து விடுவதால், மக்கள் அலுமினிய பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த, கல்லாவி உடையார் தெரு, காட்டேரி , சிங்காரப்பேட்டை, பாவக்கல், ஆகிய கிராமங்களில் சுமார் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள், மண்பாண்டம் தயாரிக்கும் தொழில் செய்து வருகின்றனர். ஆனால் தற்போது சுமார் 120 குடும்பங்கள் மட்டுமே, இதை குலதொழிலாக கருதியும், கல்வி அறிவு இல்லாததால், வேறு தொழிலுக்கு செல்ல வழியின்றி, இந்த தொழில் செய்து வருவதாக கூறுகின்றனர்.

கல்லாவி பகுதியை சேர்ந்த, மண்பாண்ட தொழிலாளிகள் சக்திவேல், பொன்னுவேல், பாவக்கல் முருகன், ஆகியோர் கூறும்போது, குல தொழிலலை நம்பி செய்து வருவதாகவும், இங்கு தயார் செய்யப்படும் பானைகள் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பொது மக்கள் விரும்பி வாங்காததால் விற்பனை குறைந்து காணப்படுகிறது. பெரும்பாலான மக்கள், அலுமினிய பாத்திரங்களில் சமைத்து உண்பதால், பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலை மாறி மீண்டும் மண்பாண்டங்களில் சமைக்கும் நிலை வரும் எனவும், தற்போது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை எனவும், மண் பாண்டங்கள் ரூ.10 முதல் ரூ.350 வரை உள்ள பொருள்களை தயார் செய்து விற்பணை செய்து வருகிறோம் என கூறினர்.

கொரோனா காலத்தில் மண்பான்டங்களை, வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாமலும், தயார் செய்த பண்டங்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வந்தோம், மேலும் தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் மண்பானையில் பொங்கல் சமைக்க வேண்டும் என்பதற்காக மண்பானைகளை மக்கள் வாங்கிச்செல்வர், ஆனால் அதில் கடந்த இரண்டு மாதங்களாக, மழையின் காரணமாக எங்களது தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் இந்த தொழிலை செய்து வருவதாக கூறுகின்றனர்.
மண்பானை தொழிலில் ஈடுபட்டுள்ள பட்டதாரி இளைஞர் கோபிநாத் எம்.எஸ்.சி. ,பி.எட், எம்.பீல். படித்துள்ளார் இவர் தொப்பூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா காரணத்தினால், கல்லூரிக்கு செல்ல முடியாமல் தனது தந்தையுடன் சேர்ந்து, குழ தொழிலை செய்து வருகிறார். அவர் கூறும்போது மூலப்பொருளான, களிமண் ஒரு மாட்டு வண்டி மண் ரூ.1000 க்கும் , சிவப்பு மணல் ரூ. 3000 க்கும் வாங்கி வருகின்றனர், இருந்த போதிலும் மண் எடுப்பதில் நிறைய சிக்கல் உள்ளதாக கூறினார்.

செய்தியாளர் – பழனி / ஊத்தங்கரை நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *