January 18, 2022

புழல் சூரப்பேட்டில், பொங்கலை முன்னிட்டு மகளிர் கூட்டமைப்பினர் நடத்திய விளையாட்டு போட்டி, முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி பரிசுகளை வழங்கினார்…

1 min read
Spread the love

சென்னை புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியில் இயங்கி வரும் சூரப்பட்டு மகளிர் கூட்டமைப்பினர் வருடந்தோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு மகளிருக்கான பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது வழக்கம். அதே போன்று இந்த வருடம் சூரப்பட்டு மகளிர் கூட்டமைப்பு தலைவர் சித்ரா தலைமையில் நடைபெற்ற பொங்கல் திருநாள் நிகழ்ச்சியில் பெண்களுக்கான மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது.

இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் பல வண்ணங்களில் கோலங்களை வரைந்தனர். மேலும் அதனைத் தொடர்ந்து பிஸ்கட் தின்னும் போட்டி, பாட்டிலில் நீர் நிரப்பும் போட்டி, குத்துவிளக்கு போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி வழங்கினார்.

முன்னதாக பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மண்டல குழு தலைவர் டி. வேலாயுதம், முன்னாள் அரசு கூடுதல் வழக்கறிஞர் எம்.தமிழரசன், 30-வது மேற்கு வட்ட கழக செயலாளர் வி. கந்தராஜ் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு மகளிர் கூட்டமைப்பு சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் தேவி, குமுதா, மஞ்சுளா, மீனா, அமுதா, வசந்தி, சுகன்யா, வித்யா, ஹேமாமாலினி, பரமேஸ்வரி, கலைவாணி, கலா உள்ளிட்ட மகளிர்கள் இனைந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தியாளர் – ரஞ்சித் / மாதவரம்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *