January 18, 2022

ஊத்தங்கரை பேரூராட்சியில், பெண் தூய்மை காவலரை தாக்க முயன்ற, மேற்பார்வையாளர் கன்னத்தில் பளார்…

1 min read
Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தேர்வுநிலை பேரூராட்சியில், தூய்மை காவலர்களை கண்காணிக்கும் மேற்பார்வையாளராக பெரியசாமி (56) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் பேரூராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சேரக்கூடிய குப்பைகளை அகற்றும் பணியை செய்யக்கூடிய தூய்மை காவலர்களை மேற்பார்வையிட்டு வேலை வாங்குவது வழக்கம். இந்நிலையில், வழக்கம் போல் அவர் அனைத்து தூய்மை காவலர்கள் இடமும் அவரவர்கள் செல்லவேண்டிய இடத்தையும் குறிப்பிட்டு அங்கு அவர்கள் செய்யக்கூடிய வேலைகளையும் திட்டமிட்டு அறிவித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்தில் அதே பேரூராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை காவலர் சங்கீதா என்பவரும் இருந்துள்ளார். பெரியசாமி அனைவரிடமும் எப்போதும் போல் அதட்டி அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை குறிப்பிட்டு பேசிக்கொண்டிருக்கும்போது, பெரியசாமிக்கும் சங்கீதாவிற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது வாய்த்தகராறு முற்றி ஒருகட்டத்தில் மேற்பார்வையாளர் பெரியசாமி தூய்மை காவலர் சங்கீதாவை தாக்க ஓடி வந்துள்ளார். அப்போது சுதாரித்து கொண்ட சங்கீதா பெரியசாமியின் கன்னத்தில் திடீரென அவர் எதிர்பாராத சூழ்நிலையில் பளார் என ஒரு அறை கொடுத்தார். பெரியசாமியும் திரும்ப சங்கீதாவை தாக்கியுள்ளார். அவர்கள் இருவரும் கைகலப்பு பிரச்சனையால் காயமடைந்த சூழ்நிலையில், இருவரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இருவரும் , ஊத்தங்கரை போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரனையில் மேஸ்திரி, சங்கீதா சரியாக பணி செய்யவில்லை என கூறி, திட்டியவாறு தாக்க முயன்றதால், ஆத்திரமடைந்த சங்கீதா, மேஸ்திரியை திட்டி கண்ணத்தில் அறைந்ததாக தெரிகிறது.

செய்தியாளர் – பழனி
நிழல் . இன் – 8939476777

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *