January 18, 2022

மணலி புதுநகர் பகுதியில், குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து, பறை இசை மற்றும் வீதி நாடகம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

1 min read
Spread the love

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம்-2, வார்டு -16 ல் சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை என்விரோ நிறுவனத்தின் வழியாக குப்பைகளை தரம் பிரித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டது.

அதில், பறை இசை மற்றும் வீதி நாடகம் மூலம் மணலி புதுநகர் பகுதி பொதுமக்களுக்கு
விழிப்புணர்வு வழங்கபட்டது.
இந்த விழிப்புணர்வு நாடகங்களும் , பறை இசை நிகழ்ச்சிகளும் அய்யா கோயில் பகுதியில் துவங்கி ஒவ்வொரு தெரு முனையிலும் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல அலுவலர் அவர்கள் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை விநியோகித்து குப்பைகளை தரம் பிரித்து அளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

பச்சை, நீலம் மற்றும் சிவப்பு நிற பொங்கல் பானைகள் காட்சிப்படுத்தப்பட்டு அதன் மூலம் ஈரம், உலர் மற்றும் அபாயகரமான வீட்டு கழிவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யபட்டது.
ஐ ஈ சி குழுவினர் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்.

மண்டல அலுவலர், தலைமையில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர மாநகராட்சியின் மண்டலம்- 2ல் பணியாற்றும்
தூய்மை பணி மேற்பார்வையாளர், பிரிவு அலுவலர், வார்டு மேற்பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவேளியுடன் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *