27 ராசி நட்சத்திர லிங்க சிவன் கோவிலில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது!

மதுரை வில்லாபுரத்தில் பிரசித்தி பெற்ற 27 ராசி நட்சத்திர லிங்க சிவன் கோவிலில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது.

27 ராசி நட்சத்திர லிங்க சிவன் கோவிலில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது!

மதுரை மாவட்டம் மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள சந்திர மௌலீஸ்வரர் கோவிலில் 12 ராசிக்குரிய 27 நட்சத்திர லிங்க கோயில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கடந்த சனிக்கிழமை மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

பால், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்த அபிஷேகம் உள்பட சிறப்பு அபிஷேக ஆராதனையுடன்  பூஜை நடைபெற்றது. பிரசித்தி பெற்ற கோளில் சனி மகா பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.

- செய்தியாளர் வி.காளமேகம், மதுரை
நிழல்.இன் / 8939476777