மீன் பிடிக்கச் சென்ற மீனவர் பேரலையினால் தடுமாறி படகிலேயே மரணம் : சோகத்தில் மீனவ கிராமம்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மீன் பிடிக்க சென்ற மீனவர் பேரலையில் தடுமாறி படகிலேயே மரணம்.

மீன் பிடிக்கச் சென்ற மீனவர் பேரலையினால் தடுமாறி படகிலேயே மரணம் : சோகத்தில் மீனவ கிராமம்
மீன் பிடிக்கச் சென்ற மீனவர் பேரலையினால் தடுமாறி படகிலேயே மரணம் : சோகத்தில் மீனவ கிராமம்

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த சாட்டான் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ராமன். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் தனது அண்ணன் ரமேஷ் மற்றும்  சுரேஷ் ஆகியோரோடு முகத்துவாரம் வழியே கடலுக்குள் சென்று மீன் பிடித்துள்ளார்.

மீன் பிடித்து விட்டு இன்று பிற்பகல் 12.30 மணியளவில் முகத்துவாரம் அருகே ஃபைபர் படகில் வந்து கொண்டிருந்தபோது, முகத்துவாரத்தில் ஏற்பட்ட பெரிய அலைகளின் தாக்கத்தால் படகிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

அவரை கரைக்கு கொண்டு வந்து எழுப்பியும்எழுந்திருக்கவில்லை‌. இதனால் படகிலேயே பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதித்துள்ளனர். அதில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் கூறியுள்ளனர். இது குறித்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.