பழவேற்காட்டில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் மூழ்கி பலி

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த சாட்டான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் மீன்பிடிக்க சென்ற போது நீரில் மூழ்கி  பலி.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த சாட்டான் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர் அசோகன்.

நேற்று இரவு தாங்கல் பெரும்புலம் ஊராட்சிக்குட்பட்ட கருங்காலி அருகே பழவேற்காடு ஏரியில் இணையும் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடிக்க சென்ற போது நீரில் மூழ்கி பலியானார்.

தகவல் அறிந்து காட்டூர் காவல்துறையினர் இறந்த மீனவர் அசோகன் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்ற வரும் நிலையில் மீனவரின் இறப்பை முன்னிட்டு பழவேற்காடு சுற்றுவட்டார மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.