பரமக்குடி ரயில் நிலையம் முன்பு பசுமை பூங்கா அமைக்க வேண்டும் : சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்.

ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து கொண்ட பரமக்குடி இரயில் நிலையம் முன்பு பசுமை பூங்கா அமைத்தால், பயணிகளுக்கும் இரயில்வே நிர்வாகத்திற்கும் பயனளிக்கும் என சமூக ஆர்வளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பரமக்குடி ரயில் நிலையம் முன்பு பசுமை பூங்கா அமைக்க வேண்டும் : சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்.

தென்னக ரயில்வேயில் மதுரைக்கு அடுத்து சிறப்பு பெற்றதும், வருவாய் அதிகம் ஈட்டக்கூடியது பரமக்குடி ரயில்  நிலையம். பரமக்குடி அருகே சத்திரக்குடி, இளையான்குடி, சாலைக்கிராமம், நயினார் கோவில், பார்த்திபனூர், முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி, கடலாடி உள்பட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள், மதுரை, சென்னை, கோவை, கன்னியாகுமரி, திருப்பதி உள்பட வாராந்திர வடநாடுகளுக்கு ரயிலில் செல்லும் பயணிகள் பரமக்குடி ரயில் நிலையத்திற்கு வந்து ரயிலில் ஏறிச் சென்று, வருவது வழக்கமாக உள்ளது.

இதனால், பயணம் செல்பவர்கள், அவர்களை வழியனுப்ப - வரவேற்க என வரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் காணப்பட்டு, எந்நேரமும் மக்கள் நிறைந்த ரயில் நிலையமாக காட்சியளிக்கிறது பரமக்குடி இரயில் நிலையம்.

வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தங்கள் பகுதியில் இருந்து வரும் பஸ்களில் முன் கூட்டியே வந்து தாங்கள் செல்லும் ரயிலுக்கு அதிக நேரம் காத்திருக்கக்கூடிய அவல நிலையாக உள்ளது. இந்நிலையில், பயணிகள் நலன் கருதி ரயில் நிலையம் முன்பு காலியாக உள்ள மைதானம் வெற்று இடமாக காட்சியளிக்கிறது. 

இந்த இடத்தில் பசுமை பூங்கா அமைத்து அதனை பராமரித்து வந்தால், அதன் மூலம் தென்னக ரயில்வேக்கு வருமானமும், பயணிகள் காத்திருக்கும் நேரத்தில் பூங்காவில் அமர்ந்து உரையாடுவது அவர்களது உடல் நலத்திற்கு நன்மையாக இருக்கும். 

இது சம்மந்தமாக இயற்கை ஆர்வலர்கள்-சமூக ஆர்வலர்கள் எஸ். வேலாயுதம், என்.சுகுமாறன் ஆகியோர் "மதுரை சென்டருக்கு அடுத்து பிரபலமான பரமக்குடி ரயில் நிலையத்தில் தினமும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை ரயில்கள் வந்து செல்கின்ற போது பயணிகள், மக்கள் கூட்டமாக இருப்பார்கள்.

மேலும், வயதானவர்கள் மாலை நேரத்தில் அமர்ந்து ஓய்வு பெறவும் வசதியாக இருக்கும். பயணிகளை கவரும் விதத்திலும், தென்னக ரயில்வேக்கு (பராமரிப்பு நிறுவனங்கள் மூலம்) வருமானம் வரும் வகையில் பசுமை பூங்கா அமைத்தால் அனைவரும் அதனை வரவேற்பதோடு, ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்களின் எண்ணிக்கையும் கூடும்.

இதனை கருத்தில் கொண்டு, தென்க ரயில்வே நிர்வாகம் பரமக்குடி ரயில் நிலையம் முன்பு  பசுமை பூங்கா அமைத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்" என கூறினர்.

- சிறப்பு செய்தியாளர் மாமுஜெயக்குமார் 
நிழல்.இன் - 8939476777