இளம்பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர் - காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போலீசார்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இளைஞர் ஒருவரால் கர்ப்பமாகப்பட்ட இளம்பெண் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் விசாரணை நடத்தாமல் அலைக்கழிப்பு செய்ததால் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்.

இளம்பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர் - காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போலீசார்
இளம்பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர் - காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போலீசார்

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் 26 வயதான சங்கீதா. இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் பகுதியில் இயங்கி வரும் தனியார் கம்பெனியில் ஊழியராக பணி செய்து வருகிறார். 

அதே கம்பெனியில் கும்மிடிப்பூண்டி வட்டம் வெங்கல் கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரின் மகன் முனிவேல் என்ற இளைஞரும் சங்கீதாவும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் முனிவேலும் சங்கீதாவும் வெளியே சென்று தனிமையில் சந்தித்துக்கொண்டுள்ளனர். இந்த சூழலில் சங்கீதா கர்ப்பமாகியுள்ளார். தற்போது மூன்று மாத கர்ப்பமாக இருக்கும் சங்கீதா, முனிவேலிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால், முனிவேல் சங்கீதாவை திருமணம் செய்துகொள்ள முடியாது என மறுத்துள்ளார். 

அதோடு சங்கீதாவிடம் பேசுவதையும் சந்திப்பதையும் தவிர்த்துள்ளார். இதனால், முனிவேலை நம்பி காதலித்து ஏமார்ந்துபோன சங்கீதா பொன்னேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், புகார் கொடுத்து ஒரு மாதம் ஆகியும் போலீசார் அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார்.

இதனால், மேலும் மன வேதனைக்கு ஆளான சங்கீதா பொன்னேரி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். காதலிப்பதாக கூறி இளம்பெண் ஒருவரை இளைஞர் ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.