மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஈரோட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திய பா.ஜ.கவினர்!

மின் கட்டண உயர்வை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஈரோட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திய பா.ஜ.கவினர்!

ஈரோடு மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் 
ST.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜிகே நாகராஜ் கூறியதாவது "தமிழ்நாடு மின்சார வாரியம் ரூபாய் 1. 50 லட்சம் கோடி கடனில் உள்ளது 12 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டத்தில் உள்ளது இது அதனுடைய நிர்வாக சீர்கேட்டை குறிப்பிடுகிறது. 

பல துறைகளுக்கு இலவச மின்சாரத்தை அறிவித்துள்ளார்கள் ஆனால் அதற்காக அரசு மானியத்தை மின் வாரியத்துக்கு சரியாக வழங்குவதில்லை எனவே மத்திய அரசு நிர்வாக சீர்கேட்டை களைய நடவடிக்கை எடுக்குமாறு கூறியது ஆனால் மத்திய அரசு மீது பழிபோட்டு மின் கட்டணத்தை மாநில அரசு கடுமையாக உயர்த்தி உள்ளது.

பாஜக தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், முன்னாள் எம்பி சௌந்தர், பிரச்சார அணியின் முன்னாள் தலைவர் சரவணன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

மகளிர் அணி பொதுச் செயலாளர் மோகனப்பிரியா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, செந்தில் வேதானந்தம், மாவட்ட துணைத்தலைவர் குரு குணசேகர் சின்னதுரை அருணா, பட்டியல் அணி மாநில பொதுச்செயலாளர் விநாயகமூர்த்தி, மாநிலச் செயலாளர் அய்யாச்சாமி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் அண்ணாதுரை, சூரம்பட்டி கிழக்கு மண்டல தலைவர் சிவக்குமார் உள்பட பல்வேறு மாவட்ட மண்டல ஒன்றிய நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.