திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற ஊரக களப்பணி முகாம்!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் லயோலா கல்லூரியில் புறச்சேவை துறை சார்பில் 85 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் சென்னை லயோலா கல்லூரி சார்பில் ஊரக களப்பணி முகாம் நடைபெற்றது. லயோலா கல்லூரியில் புறச்சேவை துறை சார்பில் 85 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.
இதன் இறுதி நாளான இன்று வேண்பாக்கம் புனித சந்தியாகப்பர் ஆலய வளாகத்தில் நிறைவு விழா நடைபெற்றது. ஆலய பங்கு தந்தை கிங்ஸ்லி தலைமையில் லயோலா கல்லூரியின் துறை இயக்குனர் அருட்பணி லூயிஸ் ஆரோக்கியராஜ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்னேரி நகராட்சி மன்ற துணைத் தலைவர். வழக்கறிஞர் சின்னக்காவனம் விஜயகுமார் சிறப்பு அழைப்பாளர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் லயோலா கல்லூரி புற சேவை துறை பேராசிரியர்கள் பாஸ்கர் ஜெயபாலான், அமலா ஆனந்தி,முத்துராமன், ஸ்ரீ குமாரி, விஜய் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பூர்ணவிஷ்வா
நிழல்.இன் / 8939476777