சகா சிலம்ப பயிற்சி கூடத்தின் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய AAM PROMOTERS A.ராஜா
சகா சிலம்ப பயிற்சி கூடத்தின் மூலமாக சிலம்பம் 2000 மாஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்து சாதனை.

திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி வேண்பாக்கம் AAM நகரில் இரண்டு ஆண்டு காலமாக தமிழரின் பாரம்பரிய வீர கலையான சிலம்பக் கலையை சகா சிலம்பக்கூடம் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
சிலம்பம் ஆசான்கள் தர்மராஜ், கார்த்திக் ராஜா, கோபி மற்றும் சகா சிலம்ப கூடத்தின் தலைவர் ராஜேந்திரன், ஆலோசகர் வாசு அகியோரது சிலம்ப பயிற்சி வகுப்பில் நூற்றுக் கணக்கான மாணவ, மாணவிகளை பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை சவிதா பல்கலைக்கழகம் வளாகத்தில் நடைபெற்ற சிலம்பம் 2000 மாஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்ச்சியில் சகா சிலம்ப கூடத்தின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தாங்களுக்கு அளித்த நேரத்தில் ஒரே முயற்சியில் ஆசிய புக் ஆப் ரெக்கார்ட் & இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் என இரட்டை உலக சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த சகா சிலம்ப கூடத்தின் மாணவ, மாணவிகளுக்கு AAM PROMOTERS A.ராஜா அவர்கள் ( முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் திமுக மீஞ்சூர் ஒன்றிய அவைத்தலைவர்) சான்றிதழ் வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
நிழல்.இன் / 8939476777