எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினரின் கைதை கண்டித்து பொன்னேரியில் அதிமுகவினர் சாலை மறியல் மற்றும் ஆர்பாட்டம்!

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அதிமுகவினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்து பொன்னேரியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினரின் கைதை கண்டித்து பொன்னேரியில் அதிமுகவினர் சாலை மறியல் மற்றும் ஆர்பாட்டம்!

சட்டசபையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் காலை போராட்டம் தொடங்கியது. 

ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும், தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரியில் அதிமுகவினர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பானுபிரசாத், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மஜா ஜனார்த்தனன், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் நாலூர் முத்துக்குமார்,பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார்,பொன்னேரி நகர் மன்ற துணைத் தலைவர் சின்னக்காவனம் விஜயகுமார், அதிமுக நிர்வாகிகள் ஆறுமுகம், கடப்பாக்கம் ராஜா, ஏலியம்பேடு சிவா, கொண்டக்கரை அமிர்தலிங்கம், கோளூர் கோதண்டன், மீஞ்சூர் மாரி, வைரவன் குப்பம் ஞானமூர்த்தி, நாகராஜ், வஞ்சிவாக்கம் திருஞானம், மெதுர் ரமேஷ், குன்னமஞ்சேரி கோபி உள்ளிட்ட ஏராளமான கட்சியினர் இதில் கலந்து கொண்டனர்.

நிழல்.இன் / 8939476777