ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 91வது பிறந்தநாள் விழா! : சமத்துவ மக்கள் கழகம் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 91வது பிறந்தநாள் விழா சமத்துவ மக்கள் கழகம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 91வது பிறந்தநாள் விழா! : சமத்துவ மக்கள் கழகம் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

இளைஞர்களின் நாயகன் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 91வது பிறந்தநாள் விழா இன்று  சமத்துவ மக்கள் கழகம் தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் A.நாராயணன் EX.MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

அன்னாரது திருவுருவப்படத்திற்கு எர்ணாவூர் A.நாராயணன் EX.MLA அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க மாநில தலைவர் டி .எஸ் .ஆர் சுபாஷ், மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், மற்றும் கழக நிர்வாகிகள் பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் மதுரை வீரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், நாடார் பேரவை வடசென்னை மாவட்ட செயலாளர் சீனிவாசன், திருவொற்றியூர் பகுதி செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் ஸ்டாலின், ஆர்.கே.நகர் பகுதி அவை தலைவர் தங்கராஜ், நாடார் பேரவை பகுதி துணைச் செயலாளர் தாஸ், ராயபுரம் பகுதி பொருளாளர் சுடலைமணி, மாவட்ட வழக்கறிஞர் அணி கௌதம், ராயபுரம் பகுதி துணைச் செயலாளர் சிவா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு அன்னாரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

- செய்தியாளர் பூர்ணவிஷ்வா
நிழல்.இன் / 8939476777