பஞ்சாப், டெல்லி போல ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும்! : முதல்வருக்கு கோரிக்கை வைத்த ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்
பஞ்சாப் போல் ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைமை ஒருங்கிணைப்பாளர் வசீகரன் அறிக்கை
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு 2013 முதல் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து ஊழல் அறவே இல்லாமல் இந்தியாவிலேயே கடனே இல்லாத மாநிலமாக டெல்லி வெற்றி நடைபோட்டு வருகிறது.
டெல்லியில் ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது இதில் 36 லட்சம் குடும்பங்கள் பயணித்து வருகின்றன. இதே போல் கல்வி, சுகாதாரம், பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் உள்ளிட்ட ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
அதே போல பஞ்சாபிலும் ஆம்ஆத்மி அரசு மாதம் 300 யூனிட் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இது மின்சார மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
கல்வி, சுகாதாரத் துறைகளில் டெல்லி கெஜ்ரிவால் மாடலை வரவேற்கும் மற்றும் நேரில் பார்த்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின, தமிழ்நாட்டிலும் டெல்லி, பஞ்சாயத்து போல மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் திட்டத்தை தமிழக அரசு உடனே அறிவிக்க வேண்டும்" என தமிழக ஆம்ஆத்மி கட்சியின் சார்பில் தமிழ்நாடு தலைமை ஒருங்கிணைப்பாளர் வசீகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.