மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம்.
ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில், மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்கிற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தும்மக் குண்டு அருகே உள்ள டி. புதுப்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர்கள் தர்மராஜ் - ஆண்டாள் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மன்கள். இரட்டைக் குழந்தைகளாக பிறந்த இருவரில் ஒருவர் லட்சுமணன்.
இளைய மகனான லட்சுமணன், கடந்த 2019ம் ஆண்டு பி.காம் பட்டம் படித்திருக்கிறார். படித்து முடித்த அதே ஆண்டே இராணுவத்தில் பணியில் சேர்ந்திருக்கிறார். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளுக் கிடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில், லட்சுமணன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்திய எல்லையில் தனது மகன் வீர மரணம் அடைந்ததை அறிந்த பெற்றோரும் மற்றும் சகோதரரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும், நாட்டுக்காக உயிர் நீத்த தனது மகனின் வீர தீரச் செயலை எண்ணி பெற்றோர்கள் பெருமை அடைந்துள்ளனர் .
லட்சுமணனின் சகோதரரான, ராமர் பிகாம் பட்டம் பெற்று ,அதே கிராமத்தில் விவசாயத் தொழில் செய்து வருகிறார். லட்சுமணன் வீர மரணம் அடைந்த தகவலை அறிந்த டி.புதுப்பட்டி கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வி.காளமேகம் - செய்தியாளர், மதுரை.
நிழல்.இன் / 8939476777