வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளியை 24 மணி நேரத்திற்குள் பிடித்த முதல்நிலை காவலருக்கு குவியும் பாராட்டு!

வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் பிடித்து காவல்நிலையத்திற்கு கொண்டுவந்த உத்தமபாளையம் காவல்நிலைய முதல்நிலை காவலர் சுந்தருக்கு உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளியை 24 மணி நேரத்திற்குள் பிடித்த முதல்நிலை காவலருக்கு குவியும் பாராட்டு!

தேனி மாவட்டம், உத்தமபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவர் சிலை அருகில் லாரி ஓட்டுனர் ஒருவர் தன்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி நின்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் லாரி ஓட்டுநரை அச்சுறுத்தி அவர் வைத்திருந்த ரூபாய் 10,000 மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.8000 பணத்தை பறித்து  சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து லாரி ஓட்டுனர், உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் நிலைய ஆய்வாளர் K.சிலைமணி தலைமையில்  குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், முதல் நிலை காவலர் S.சுந்தர்-973 விரைந்து  செயல்பட்டு வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளி ஒருவரை துரிதமாக 24 மணி நேரத்திற்குள்ளாக மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தார்.

குற்றவாளியை விரைவாக பிடித்த முதல் நிலை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ் அவர்கள் தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

-சுகன்யா முரளிதரன், செய்தியாளர், தேனி

நிழல்.இன் / 8939476777