முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 136அடியை நெருங்குகிறது!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 136அடியை நெருங்குகிறது!

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் இன்று  காலை விநாடிக்கு 2,831 கன அடியாக இருந்த  முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து  மாலையில் 6,391 கன அடியாக அதிகரித்துள்ளது.

எனவே அணையின் நீர் மட்டம் 135.15அடியில் இருந்து  தற்போது 135.90 அடியாக உயர்ந்துள்ளதால் இரவுக்குள் 136 அடியாக எட்டி   அணைப்பகுதி  உள்ள கரையோர  கேரளா மக்களுக்கு   முதல்  வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை 6மணி நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 6,092மில்லியன் கன அடியாகவும், தமிழகத்திற்கு 1,903 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.