திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன்பு சேதமடைந்த நிலையில் பாதாள சாக்கடை கால்வாய் மூடி : கோவிலுக்கு வரும் பக்கதர்களுக்கு ஆபத்து!

திருவண்ணாமலை கோவில் ராஜகோபுர வாசலில் அமைந்துள்ள பாதாள சாக்கடை கால்வாயின் மூடி உடைந்த நிலையில் உள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன்பு சேதமடைந்த நிலையில் பாதாள சாக்கடை கால்வாய் மூடி : கோவிலுக்கு வரும் பக்கதர்களுக்கு ஆபத்து!

திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய இத்திருலத்தில் பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வெளி மாநிலத்தில் இருந்தும்  அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வருகிறார்கள். ராஜகோபுரம் முன்பு பக்தர்கள் அவ்வழியாகத்தான் கோயிலுக்கு செல்கின்றனர்.

அப்படி இருப்பின் இந்த பாதாள சாக்கடை இப்படி திறந்துள்ளதால் அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- செய்தியாளர் மூர்த்தி, திருவண்ணாமலை
நிழல்.இன் / 8939476777