பரமக்குடி மக்கள் நூலகத்தில் நூல் திறனாய்வுக் கூட்டம்!
பரமக்குடி மக்கள் நூலகம் சார்பாக நூல் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கவிஞர்கள் எழுத்தாளர்கள், நூலக நிர்வாகிகள், வாசகர் வட்டத்தினர் கலந்துகொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி மக்கள் நூலகம் சார்பாக நூல் திறனாய்வுக் கூட்டம் மக்கள் நூலகத் தலைவர் செ.சந்தியாகு தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சி.பசுமலை பொருளாளர், வே.இராஜேந்திரன் ஆகியோர் நூலக செயல்பாடுகள் குறித்துப் பேசினர்.
எழுத்தாளர் கூ.பழனியாண்டி எழுதிய ஊர் வாய் என்ற நூலினை க.குணசேகரன் திறனாய்வு செய்தார். நூலக வளர்ச்சி குறித்து நல்லாசிரியரும், முன்னாள் தலைமை ஆசிரியர் அ.பவுல், மா.இராஜேந்திரன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜி.உமாசங்கர், வழக்கறிஞர் எஸ்.ஜான் சேவியர், பிஎஸ்என்எல் வே.சேதுராஜன் ஆகியோர் பேசினர்.
ஓய்வு பெற்ற ஆர்.டி.ஓ கூ.பழனியாண்டி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் தலைமை ஆசிரியர் ப.சந்திரபோஸ், மக்கள் பாதை இராவணன் குமார், செயற்குழு உறுப்பினர் நா.சிவராமன், நகராட்சி அலுவலர் மா.நாகராஜன், மணல் சிற்பக் கலைஞர் ஆசிரியர் பா.சரவணன், வாசகர் வட்டத்தைச் சேர்ந்த குருநாதன், கே.காரிச்சாமி எல்.கார்த்திக்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் எஸ்.ஐயப்பன் நன்றி கூறினார்.
- செய்தியாளர் மாமுஜெயக்குமார்
நிழல்.இன் / 8939476777