முதலமைச்சர் காலை உணவு திட்டம் : திருவொற்றியூரில் தொடங்கிவைத்த எம்.எல்.ஏ. கே.பி.சங்கர்!

முதலமைசர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக தொடங்கிவைத்த, காலை உணவு திட்டம் திருவொற்றியூரில் துவங்கி வைத்த எம்.எல்.ஏ கே.பி சங்கர்.

முதலமைச்சர் காலை உணவு திட்டம் : திருவொற்றியூரில் தொடங்கிவைத்த எம்.எல்.ஏ. கே.பி.சங்கர்!

திருவொற்றியூர், செப். 16- தமிழகம் முழுவதும் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. 

பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட 14 பள்ளிகளில் படிக்கும் 1600 மாணவ-மாணவியர் பயன்பெறும் வகையில் காலை உணவு. திட்டத்திற்காக எண்ணூர் தாழங்குப்பம் புயல் பாதுகாப்பு இல்லம் மற்றும் அன்னை சிவகாமி நகர் ஆகிய இடங்களில் இருந்து உணவுகள் தயாரிக்கப்பட்டு, ஹாட்பாக்சில் அடைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் தினமும் அனைத்து பள்ளிகளுக்கும் எடுத்துக் கொண்டு செல்லப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது

நேற்று காலை காலை உணவு திட்டத்தை அன்னை சிவகாமி நகர் பள்ளியில் திருவொற்றியூர் எம். எல். ஏ கே.பி சங்கர் காலை  உணவாக சேமியா கிச்சடி, ரவா உப்புமா மாணவ மாணவிகளுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் தமிழரசன், கே.பி சொக்கலிங்கம், கோமதி சந்தோஷ், குழல் வட்டார கல்வி அலுவலர் பால் சுதாகர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

அதே போன்று திருவொற்றியூர் பூந்தோட்ட பள்ளியில் மண்டல குழு தலைவர் தி.மு தனியரசு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிழல்.இன் - 8939476777