பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வழிவகை செய்ய வேண்டும் : தேனி மாவட்ட எஸ்.பிக்கு சமூக ஆர்வளர்கள் கோரிக்கை!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன், பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் போதைப் பொருள் விழிப்புணர்வு மற்றும் அதற்கான சான்றிதழ் பெற்றுக்கொள்ள வழிவகை செய்துள்ளது போலவே தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வழிவகை செய்ய வேண்டும் : தேனி மாவட்ட எஸ்.பிக்கு சமூக ஆர்வளர்கள் கோரிக்கை!

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் மேற்பார்வையில், தமிழகத்தில் போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருட்களை தயாரித்தல், பயன்படுத்துதல், கடத்துதல் போன்ற குற்றங்களை எதிர்த்து,தீவிர நடவடிக்கைகளை எடுத்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை தமிழக அரசு நடத்திவருகிறது. 

இதன் ஒருபகுதியாக அமலாக்க பணியகம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு இணையதள முகவரியில் போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் www.nibcid.org/pledge என்ற இணையதள முகவரியில் தங்களின் சுய விவரங்களான பெயர்,பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண், அஞ்சல் குறீயிடு ஆகியவற்றை பதிவு செய்து தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இணையவழியாக உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம். உறுதிமொழி எடுத்தவுடன் தாங்கள் உறுதிமொழி எடுத்ததற்கான சான்றிதழை பதிவிறக்கம் அல்லது தங்களின் சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொள்ளலாம். 

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையினைத் தொடர்ந்து,தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் உறுதிமொழி எடுத்து அச்சான்றிதழை தங்களின் சமூக வலைதளத்தில் பகிர்ந்து மற்றவர்களையும் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றிட வேண்டி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ் ஊக்கப்படுத்த வேண்டும் என தேனி மாவட்ட சமூக ஆர்வலர்கள் ஆர்வ மிகுதியில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

செய்தியாளர் - சுகன்யா முரளிதரன்