சாகர் மித்ரா திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் பொன்னேரியில் நடைபெற்றது!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீன்வளத்துறை அலுவலகத்தில் சாகர் மித்ரா திட்ட பணியாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மீன் உற்பத்தியை 2024-25 ஆண்டுக்குள் 220 லட்சம் டன்களாக அதிகரிப்பது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

சாகர் மித்ரா திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் பொன்னேரியில் நடைபெற்றது!

நாட்டில் மீன்வளத் துறையில் ஒருமித்த கவனம் செலுத்தி நீடித்த வளர்ச்சி காண ‘பிரதான் மத்ஸ்ய சம்பட யோஜ்னா’ என்ற முன்னோடி திட்டத்தை, மத்திய அரசு அறிவித்து செயல்படுத்த தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் கடலோர மீன்பிடி கிராமங்களில், ‘சாகர் மித்ரா’ பணிக்கு விண்ணப்பிக்க, தமிழக அரசின் மீன்பிடி மற்றும் மீன்வர் நலன் துறை அறிவிப்பு வெளியிட்டது. 

மீன் உற்பத்தியை 2024-25 ஆண்டுக்குள் 220 லட்சம் டன்களாக அதிகரிக்கும் நோக்கில் ‘பிரதான் மத்ஸ்ய சம்பட யோஜ்னா’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளூர் மீனவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது; அரசுக்கும், உள்ளூர் மீனவர்களுக்கு இடையே தொடர்பு பாலமாக செயல்படுவது; மீன் வளர்ப்பு விவசாயிகள் அமைப்புகளை உருவாக்க முனைவது; வானிலை எச்சரிக்கை, இயற்கை பேரிடர் தொடர்பான தகவல்களை கொண்டு சேர்ப்பது உள்ளிட்டவை, ‘சாகர் மித்ரா’வின் முக்கிய பணி மற்றும் கடமை.

இத்திட்டத்தின் கீழ், சாகர்மித்ரா பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுடன் பொன்னேரி மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன் கலந்துரையாடினார். மீன்வளத்துறை சார் ஆய்வாளர்கள் செல்வம், அன்பழகன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் சாகர் மித்ரா திட்ட பணியாளர்கள் உடன் இருந்தனர்.

நிழல்.இன் / 8939476777