நடிகர் அருள்நிதி நடித்த டைரி படத்தின் அறிமுக விழா மதுரையில் உள்ள திரையரங்குகளில் நடைபெற்றது!

நடிகர் அருள்நிதி நடித்த டைரி திரைப்படத்தின் புரமோஷன் விழா மதுரையில் உள்ள சினிமா தியேட்டர்களில் நடைபெற்றது. ஏராளமான ரசிகர்கள் பங்கேற்பு.

நடிகர் அருள்நிதி நடித்த டைரி படத்தின் அறிமுக விழா மதுரையில் உள்ள திரையரங்குகளில் நடைபெற்றது!

மதுரை திரைப்பட நடிகர் அருள்நிதி நடித்து வெளிவர உள்ள டைரி திரைப்படத்தின் அறிமுக விழா மதுரையில் உள்ள வெற்றி சினிமாஸ், சினிப்பிரியா காம்ப்ளக்ஸ் திரையரங்குகளில் நடைபெற்றது.

விழாவில் படத்தின் கதாநாயகன் அருள்நிதி படத்தின் கதாநாயகி படத்தின் இயக்குனர் படத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் பாடலாசிரியர் பட விநியோகஸ்தர் குணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவிற்கு முன்னதாக தியேட்டரில் டைரி படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது. அதனை தொடர்ந்து நடிகர் நடிகைகள் இயக்குனர் பாடலாசிரியர் உள்ளிட்டோர் ரசிகர்கள் மத்தியில் டைரி படத்தினை பற்றி பேசினார்கள். 

மேலும் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர் பதில் கூற கலந்துரையாடலும் நடைபெற்றது.

- செய்தியாளர் வி.காளமேகம் மதுரை.
நிழல்.இன் / 8939476777