மணலி தீயணைப்பு துறையினரால் நடத்தப்பட்ட பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி!
வீட்டில் இருக்க கூடிய அன்றாட பொருட்களை வைத்தே எப்படி பாதுகாத்து கொள்வது என்பது குறித்து மணலி தீயணைப்பு துறையினர் பொதுமக்களிடையே ஒத்திகை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சென்னை புறநகர் மாவட்டம் மணலி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் மூலம் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு வெள்ளம் மற்றும் மழை நீரால் தாழ்வான பகுதிகளில் பாதிப்புக்கு உள்ளாகும் பொதுமக்கள் தங்கள் அன்றாடம் பயன்படுத்தும் வாட்டர் கேன் தண்ணீர், குடம் வாட்டர் பாட்டில், மூங்கில், தெர்மோகோல், கேஸ் சிலிண்டர், லாரி ட்யூப், வாழைமரம் ஆகிய பொருட்களைக் பயன்படுத்தி எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்ற பிரச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
சென்னை புறநகர் மாவட்ட அலுவலர் திருமதி ஆர்.ஜாஸ்மின் அறிவுறுத்தலின்படி உதவி மாவட்ட அலுவலர்கள் வழிகாட்டுதலின்படி நிலைய அலுவலர் எம்.முருகானந்தம் மற்றும் நிலைய அலுவலர் போக்குவரத்து தேவராஜ் தலைமையில் மணலி நிலைய பணியாளர்களால் மணலி முல்லைவாயல் அருகே அமைந்துள்ள கொசத்தலை ஆற்றிலும் கொசப்பூர் சென்னை 60 என்ற முகவரியில் அமைந்துள்ள கோவில் குளத்திலும் சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரி மாண மாணவியர் மற்றும் கொசப்புர் அரசு பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். தங்களிடம் உள்ள அன்றாட பொருட்களை வைத்து எப்படி மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டுமென நடைபெற்ற இந்த ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்ததாக பலரும் கூறினர்.
- செய்தியாளர் சீனிவாசன்.
நிழல்.இன் / 8939476777